#உடலை_உரமாக்க…… #அருமையான_வழிகள். நமது உடலில் எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, உட்கார நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். 👉எலும்புகள் தேய்மானம் அடைகின்றன இதனால்… ▶நடப்பதற்கு சிரமம், ▶கூன் விழுவது ▶மூட்டு வலி, உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும். எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம். #இதை……… குடும்பத்தில் உள்ள அனைவருமே பின்பற்றினால் தற்போதும் பிற்காலத்திலும் எலும்பில் பிர்ச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும் கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்த உள்ளது ....