பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள் 1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும் காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் நம் காதிற்குள் பூச்சிகள் புகுந்து விட்டால் என்ன செய்வது? காதினுள் சென்ற பூச்சியை முதலில் சாகடிக்க வேண்டும், எவ்வாறு அவற்றை சாகடிப்பது? காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது எண்ணெய் வகையோ அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினாள் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்துவிடும். இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது, இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அத...
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் சிலருக்கு மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதாக இந்திய மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக கவலை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இந்த பூஞ்சைத் தொற்றால் 52 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநிலச் சுகாதாரத்துறை தற்போது அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது. கருப்பு பூஞ்சை எனப்படும் பூஞ்சை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோன நோயாளிகளுக்கு அரிதாக தோன்றும். இந்த நோய் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதுவும் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போன நபர்களின் உறுப்புகளில் மியூகோர்மைகோசில் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி சில தினங்களிலேயே அவர்களின் உறுப்புகளை சிதைத்து விடுவதாகவும் அதோடு இந்த பூஞ்சை மூளையைத் தாக்கும்போது விரைவில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை ...
Nice
ReplyDelete